தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டைகள் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் பெற்று வருகின்றன. மேலும் கொரோனாவின் போது ஊரடங்கு ஏற்பட்டதால், நிவாரண தொகை மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.இதனால் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாகவும் மற்றும் இருப்பிடச் சான்றாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இந்த ரேஷன் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டியது அவசியமானது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு தற்போது, அரசு சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நியாயவிலை கடைகளில் உள்ள தகவல் பலகையில் பொருள்கள் மற்றும் அது குறித்த விலை போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து ரேஷன் கடையில் தொழில்நுட்ப கோளாறுகளால் கைரேகை பதிவாகாத போது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிய பதிவுகளை மேற்கொண்டு அதன் பின் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் .
மேலும் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்து இருந்தால், அவர்களின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும். ஆனால் அப்படி பெயர் நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அத்தியாவசிய பொருட்களை மூன்று மாதங்களுக்கு மேல் வாங்காமல் இருந்தால் அந்த குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அரசு உத்தரவிட்டுள்ளது.