Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களே கவனம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை…!!!!!!

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ரேஷன் கார்டுதாரர்களை கட்டாயப்படுத்த கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவை பூர்த்தி செய்வதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் மலிவான விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி ரேஷன் கடைகளில் இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தற்போது ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க வரும் போது கூடுதலாக சோப்பு, அரிசி மாவு போன்ற பொருட்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் வலியுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. அத்துடன் கூடுதலான பொருட்களை வாங்கினால் தான் மற்ற ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என மிரட்டுவதாகவும் சமூக வலைத்தளங்களில் புகார்கள் எழுந்திருக்கிறது.

இதுபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ஏராளமான கடைகளில் நடைபெறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இதனை தடுப்பதற்காக கூட்டுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் இன்று கூட்டுறவு துறை அமைச்சர் புதிய ரேஷன் கடை ஒன்றை திறந்து வைக்கின்றார். இந்த புதிய ரேஷன் கடை திறந்ததை தொடர்ந்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் பேசியிருப்பதாவது, ரேஷன் கடையில் கூடுதலாக சோப்பு, அரிசி மாவு போன்ற பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் இதனை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இரு தொடர்பாக பொதுமக்கள் எப்போதும் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |