Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் மீண்டும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா நிவாரணமாக தமிழக அரசு வழங்கிய நிவாரண நிதி ரூபாய் 4000 மற்றும் மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் மக்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்பதனால் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதி, நேரத்தில் சென்று பொருட்களையும் நிவாரண நிதியையும்  பெற்றுக்கொண்டனர். இதனால் ரேஷன் கடைகள் மூலமாக கொரோனா பரவாமல் இருந்தது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் பரவி விட கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. எனவே ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் டோக்கன் முறையை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |