Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. அரிசி, சர்க்கரை கொள்முதல் விலை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக 2.19 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு கிலோ அரிசியில் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ள நிலையில் பச்சரிசி கிலோவுக்கு 35.20 ரூபாய் என்ற விலையிலும்,சர்க்கரை கிலோவுக்கு 39.27 ரூபாய் என்ற அளவிலும் நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகின்றன.

Categories

Tech |