Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் நடைபாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. அதனால் கட்டாயம் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |