Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. இன்று குறைதீர்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…. !!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிசம்பர் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம்  டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறை தீர்ப்பு முகாமில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது தொடர்பாக மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அது மட்டுமல்லாமல் இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் முகவரி மாற்றுதல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |