தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேஷ்டி சேலை வழங்குவதற்கு அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் பொங்கலுக்கு அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் மக்களுக்கு ரொக்க பணம் எதுவும் வழங்கப்படாத நிலையில் இந்த வருடம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.