Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பயன் பெற்று வருகின்றனர். மேலும் அரிசி, எண்ணெய், கோதுமை, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்களும் மக்களுக்கு மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை அனைத்து மக்களும் சமமாக வாங்கி பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘கைரேகை பதிவு செய்தல்’ என்ற திட்டம் பயோமெட்ரிக் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கைரேகை இயந்திரம் பல ரேஷன் கடைகளிலும் முறையாக வேலை செய்யவில்லை என்றும், வயதானவர்களின் கைரேகை சரியாக பதியவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனால் ரேஷன் பொருள்கள் வாங்க வரும் மக்களை திருப்பி அனுப்பும் நிலைமை ஏற்பட்டது. மேலும் இத்தகைய பிரச்சனை அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதனால் இது தொடர்புடைய நிறுவனமான (இந்தியத்‌ தனித்துவ அடையாள ஆணையத்தின்‌ – Unique Identification Authority of India – UIDAI) உயர்‌ நிறுவனம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. அதாவது 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களை பரிசீலிக்க வேண்டும்.

ரேஷன் பொருட்களை வாங்காதவர்களுடைய முகவரியை சீரான இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். மேலும் ரேஷன் கார்டுகளில் இருந்து உயிரிழந்தவர்களின் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். வேறு யாராவது இறந்தவர்களின் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் பொருட்களை வாங்க முற்பட்டால் அந்த ரேஷன் அட்டைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதனை முறையாக செயல்படுத்தாத ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |