லடாக் எல்லையில் வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கு ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இராணுவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி, லடாக் பகுதியில் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கம்.
தியாக வீரரைத் தந்த குடும்பத்தாருக்கு என் ஆறுதல் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.