தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு 90% மானியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் நடப்பு ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது,விவசாயத்திற்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வைப்புத் தொகை குதிரை திறனுக்கு ஏற்ப 2.50 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த நிதியாண்டில் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு 90% மானியம் வழங்கப்படும். இதற்காக அரசு ஒப்புதல் அளித்து மொத்தம் 23 கோடியே 37 லட்சத்து 7 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.