Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் உயர் கல்விக்கு செல்லும் போது எந்தெந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்ளவும் அதற்கு தயார் படுத்தும் விதமாகவும் பல நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாணவர்களின் விருப்ப பாடப்பிரிவுகள் எவை என்பதை அறியும் வகையில் அவர்களிடம் எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படும். பிறகு அந்த பாடப்பிரிவு தொடர்பான திறன்களை வளர்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களின் மாவட்டத்தில் செயல்படும் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல், பிற கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் சார்ந்த விவரங்கள் கொண்ட சிற்றேடுகளை கல்லூரிகளில் இருந்து பெற்று மாணவர்கள் பார்வையில் படும்படி ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்த வேண்டும். அதே சமயம் மாணவர்களுக்கு புரியும் வகையில் சரியான வழிகாட்டி பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் பொதுவாக கோரப்படும் 51 விவரங்கள் கொண்ட படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |