தமிழகத்தில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி நிர்வாகம் மூலமாக நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து தனிநபர் மூலமாக வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பணி நியமான நாள் முதல் நிகழ் கல்வியாண்டி வரை எவ்வித பணி முடிவு இன்றி தொடர்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பணி செய்து வருவதை அவர்களின் வருகை பதிவேட்டை முழுமையாக பரிசோதித்து பரிந்துரை செய்ய வேண்டும். தகுதியான நபர்களின் பெயர்கள் மட்டுமே பரிந்துரை செய்யப்பட வேண்டும்.ஒருவேளை தகுதியற்ற நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பேற்க நேரிடும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.