Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊழல் வழக்குகளை நீண்ட காலத்திற்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கால தாமதம் ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் தப்பித்து விடுவார்கள் எனவும், நீண்ட நாள் நிலுவை என்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும் என்றும் நீதிபதிகள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |