Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தேர்வு நிறுத்தி வைப்பு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அவசர அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி ஆசிரியர் தகுதி தேர்வை முடித்தவர்கள்,இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்பள்ளி  தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் தகுதியானவர்களை தொகுப்பூதியம் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் அரசியல் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தகுதியற்றவர்கள் இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் மொட்டை எடுத்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு அதிகமாக வந்ததால் பள்ளிக் கல்வித் துறை தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் வரை தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |