தமிழகத்தில் உயர் கல்வி சேர இருக்கு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் க
நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நடைபாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு ஒரு சில நாட்களை தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும் உயர்கல்வி குறித்த பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முடிவுகளும் வெளியாக உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் இன்று முதல் வருகின்ற வெள்ளிக்கிழமை வரை உயர்கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்த ஆலோசனையின் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பிளஸ் 2 முடித்த உயர்கல்வி பயில உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து இந்த மூன்று நாட்களும் உரிய ஆலோசனை வழங்கி உதவ வேண்டும். அதுமட்டுமில்லாமல் கூடுதல் உதவிகளுக்கு அரசின் வழிகாட்டு மையத்தை 14417 என்ற எண் வழியாகவோ அல்லது மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களின் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் நேரில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆலோசனையின் போது மாணவர்களிடம் பதற்றம், கவலை, குழப்பம் போன்ற உணர்வுகள் தென்பட்டால் உடனடியாக 104 எண்ணை தொடர்பு கொண்டு நிபுணர்கள் மூலம் ஆசிரியர்கள் வழங்கிட வேண்டும். இந்த பணிக்கு அனுபவமிக்க தன்னார்வலர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது சார்ந்த வழிகாட்டுதலை பின்பற்றி மாணவர்கள் தேவையான ஆலோசனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.