என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆசிரியர்கள் தேவையற்ற நிர்வாக பணிகளை குறைத்து அவர்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக செலவிட வேண்டும்.அதனைப் போலவே என்னும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்கள் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும். வேறு எந்த ஒரு பதிவேட்டையும் பராமரிக்க தேவையில்லை என்று குறிப்பிட்ட உள்ளது.
மேலும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது. இதை தவிர வேறு எந்த ஒரு பதிவேட்டையும் பராமரிக்க தேவையில்லை. அதுபோல் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாட ஆசிரியர்களும் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது. பாடத்திட்டம் , பணிசெய் பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.