தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 24-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது ரூபாய் 6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இந்தப் பயணம் அரபு நாடுகளுடன் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணமாகவே தமிழக முதல்வர் துபாய்க்கு சென்றார் என அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் தமிழக முதல்வரின் துபாய் பயணத்தை பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்தது.
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்வர் அடுத்த கட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும், இதகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் அன்னிய முதலீடு 40% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.