Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்…. எப்போது தெரியுமா?….!!!!!

புனித தோமையார்மலை தெற்கு ஒன்றியம் திமுக சார்பாக மக்களின் மகிழ்ச்சி மாநில வளர்ச்சி வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கே.எஸ். கிராண்ட் பேலஸ் மேடவாக்கத்தில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மேடவாக்கம் ப.ரவி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்தாலப்பாக்கம் எஸ்.ரவி மாவட்ட பிரதிநிதி ரங்கநாதன், மற்றும் வேணுகோபால் ஒன்றிய பொருளாளர் ராஜி, ஒன்றிய பொறுப்பு உறுப்பினர்கள் கே.குமார், மனோநீதி, சமாதானம் நல்லமுத்து போன்றோர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நடிகர்கள் ராஜேஷ், தியாகராஜன், பாண்டியராஜன், ரமேஷ் கண்ணன், தம்பிராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதல்வரின் சாதனைகள் தொடர்பாக உரை ஆற்றினர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போன்றோர் சிறப்புரை ஆற்றினர்.

அதன்பின் ஏழைகளுக்கு தையல் மிஷின்கள் 23, இஸ்திரி பெட்டிகள் 23, மாற்றுதிறனாளிகளுக்கு சக்கரவண்டி 23 போன்றவற்றை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முதல்வராக பொறுப்பேற்ற போது தமிழகம் எப்படி இருந்தது. கொரோனா தாக்கம் இருந்த நிலையில், 25 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் போர்கால நடவடிக்கை எடுத்தார். அதற்கு துணையாக இருந்தவர் மா.சுப்பிரமணியன் ஆவார்.  10 மாதங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி 10 கோடியே 11 லட்சத்தி 20 ஆயிரத்தி 580 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல் டோஸ் 5 கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்தி 792 பேருக்கும், 2-வது டோஸ் 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 496 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 7 லட்சத்து 3 ஆயிரத்தி 290 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. அத்துடன் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். தமிழகமக்கள் ஒரு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளனர். முதலில் பாராளுமன்றம் தேர்தல், பின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு தமிழ்நாடு முதல்வர் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் சரித்திர வெற்றி பெற்றுள்ளார். இது அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி ஆகும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

 

Categories

Tech |