Categories
உலக செய்திகள்

“தமிழக மீனவர்களை” சிறையில் வைக்க உத்தரவு… அதிரடி கொடுத்த “இலங்கை நீதிமன்றம்”…!!

இலங்கை கடற்படையினர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த 6 தமிழக மீனவர்களை மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை சிறையில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராதாபுரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அந்த 6 பேரை கைது செய்துள்ளார்கள்.

அதன்பின்பு இவர்களை இலங்கை கடற்படையினர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 6 பேரை மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |