Categories
மாநில செய்திகள்

தமிழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை …. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கு மாற்றத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாய் உதவி தொகையும்,ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்காயிரம் ரூபாய் உதவித்தொகையும்,தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு 4000 ரூபாய் உதவி தொகையும், இளங்கலை பட்டப்படிப்பிற்கு 6000 ரூபாய் உதவி தொகையும்,முதுகலை பட்டப்படிப்பு மட்டும் தொழில் படிப்பிற்கு ஏழாயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு மட்டும் தொழிற் பயிற்சி, பட்டய படிப்பிற்கு 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை பட்டப் படிப்பிற்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவி தொகையும்,முதுகலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு 6000 ரூபாய் வாசிப்பாளர் தொகையாக வழங்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பட மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் முந்தைய கல்வியாண்டு இறுதி தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இவர்கள் வேறு எந்த துறைகளிலும் உதவி தொகை பெற்று வரக்கூடாது. இந்த உதவி தொகை பெறுவதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் வழங்கிய சான்றிதழ், மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகங்கள்,புகைப்படம் போன்றவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |