தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் இலகுவதால் மாணவர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும்.
மேலும் முன்பு இந்த போர் காரணமாக தமிழக திரும்பிய மாணவர்கள் யாரும் மீண்டும் உக்கிரேனுக்கு செல்லவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய அரசும் இந்தியர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.