தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை விடுத்து, அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வியை கற்பிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி வழங்கப்படும். இந்த தினத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப் பொருட்கள் வழங்க 1.2 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
தமிழக மாணவர்களே…. புத்தகம் எடுத்து செல்ல வேண்டாம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!
