Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே…. இனி பள்ளி சான்றிதழ்களில் இது கட்டாயம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழில் பெற்றோர் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பிழையின்றி அச்சிட்டு வழங்க ஏதுவாக பள்ளிகளில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பிறப்பு சான்றிதழிலுள்ள மாணவரின் பெயர், பெற்றோர் பெயர்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர் சேர்க்கை பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் மாற்று சான்றிதழ்களில் மாணவர் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான படிவத்தை உபயோகிக்க வேண்டும்.

இதையடுத்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான பெயர் பட்டியல், “எமிஸ் டிஜிட்டல்” தளத்தில் உள்ள தகவலின்படி பதிவு செய்யப்படுகிறது. ஆகவே அந்த தளத்தில் பெயர்களை தவறின்றி பதிய வேண்டும். பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பம், நீக்கல் பதிவேடு மற்றும் மாற்று சான்றிதழ்களில் தாய், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற 2 மொழிகளிலும் எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தவறின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |