Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொடர் விடுமுறையின் காரணமாக மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் குறைந்ததையடுத்து மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும். இதனையடுத்து காந்தி ஜெயந்தி, விஜயதசமி போன்றவற்றை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 5-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்து அக்டோபர் 6-ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |