கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வலுக்கட்டாயமாக கிருஸ்தவ மத போதனைகளை மாணவர்களிடம் புகுத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தையல்கலை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. தையல் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் இந்து மத கடவுள்களை பற்றி அவதூறாகப் பேசியும் கிருஸ்தவ மத போதனைகளை வலுக்கட்டாயமாக சொல்லிக் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாங்கள் இந்து பகவத் கீதை மட்டும்தான் படிப்போம் பைபிள் படிக்க மாட்டோம் என்று எவ்வளவு கூறியும் கேட்காமல் பைபிள் நல்ல புத்தகம் பகவத்கீதை கேட்பது என சொல்லி வருகிறார் எனவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த மாணவிகள் உடைய பெற்றோர்கள் இரணியல் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த ஆசிரியை மீது விசாரணை நடத்தி உண்மை என்ன என்பதை ஆராய்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரா அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு குறித்தும் சில வரிகள் பேசியிருக்கிறார். மாணவர்களின் சிரமத்தை போக்க 35 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.