தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
அதன்பிறகு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு வழிமுறைகளை பின்பற்றி நோய் பரவலைத் தடுக்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.