தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மெகா முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பு முகாமில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். நாட்றம்பள்ளியில் உள்ள ஆத்தூர் குப்பம் பகுதியில் நடைபெற்ற முகாமில் 100 வயதை கடந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
இந்தச் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சில இளைஞர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே திருப்பத்தூர் பகுதியில் 100 வயது மூதாட்டி தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு நிகழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.