Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?… இதோ எளிய வழி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள்  அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப பொருட்களை மலிவு விலையில் பெற்றுவருகின்றார்கள்.  இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா  நிவாரணநிதி 4 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்  வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல புதிய உறுப்பினர் சேர்த்தல் போன்ற வேலையை ஆன்லைன் மூலமாக செய்யலாம். குழந்தைகளின் பெயரில் ரேஷன் கார்டில் சேர்க்க ஆதார் அட்டை மிகவும் அவசியமாகும். ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது 10 முதல் 20 நாட்களில் ரேஷன் கார்டை பெற முடிகிறது.

  • முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்து Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
  • அதன் பிறகு மற்ற விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக குடும்ப தலைவர் புகைப்படம் என்ற இடத்தில் 5MB அளவில் உள்ள புகைப்படத்தினை பதிவேற்ற வேண்டும்.
  • மேலும் இருப்பிட சான்றிதழ் என்ற இடத்தில் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இறுதியாக குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை சேர்ந்து உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என்ற குறுந்செய்தி உங்களுக்கு கிடைக்கும்.

Categories

Tech |