Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 11 ஆம் தேதி தான் அடுத்த தவணை தடுப்பூசி…. சுகாதாரத்துறை செயலாளர்…..!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தடுப்பூசி போட வரும் மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் முறையான அறிவிப்பு இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து பிறகு திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசி வந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் முறையான அறிவிப்பு இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில்   செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வருவதால், மத்திய அரசு கூடுதலாக அனுப்பக்கூடிய தடுப்பூசிகளும் போதவில்லை. தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், 11-ந்தேதி தான் அடுத்த தவணை தடுப்பூசிகள் கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அதற்கு முன் கூட்டியே தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகளில் கூட்டம் அதிகம் வரும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |