Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மீண்டும் பரவும் கொரோனா….. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவத்தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவ துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கடந்த சில தினங்களாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிஏ-4 மற்றும் பிஏ-5 புதியவகை கொரோனா கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த தொற்று பாதிப்பு தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் தொற்று நோய் ஆரம்ப நிலையில் தடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நோய்த்தடுப்பு விதிகளை முறையாக கடைபிடித்தல், பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை நடைமுறைகள், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகிகள் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடை பிடிப்பதே உறுதி செய்ய வேண்டும். அதனைப் போலவே தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தொடர்பில் இருந்தவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்தல் வேண்டும். மேலும் வரும் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்களை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |