தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீப காலமாக மின் பயன்பாடு அளவீடில் குளறுபடி, அதிகமான மின்கட்டணம் செலுத்து நிர்பந்திக்கப்படுவது போன்றவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த ஆண்டு 1.50 கோடி பயனாளர்களின் தொடர்பு எண் மின்வாரியத்திடம் இருந்தது. இது தற்போது மூன்று கோடியாக உயர்ந்துள்ளது. முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்படுவதை தடுக்க மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதின் மூலம் தீர்வு காண முடியும்” என தெரிவித்துள்ளார்.