தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் இது தவறான புகார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனிடையே வேலூரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாவிட்டால் பொதுமக்கள் 104 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.