Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொய்யான செய்திகளை பரப்பாதீங்க….. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

சமூக வலைத்தளங்கள் மூலமாக மின்வெட்டு என்ற பொய்யான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வெட்டு ஏற்பட்டால் 24 மணி நேரமும் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் மின்வெட்டு என்ற பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். 18 ஆயிரம் மெகாவாட் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் சொந்த உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின் தேவையை பூர்த்தி செய்ய மாநிலத்தில் சொந்த மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |