தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது.
இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால் இந்த வருடம் பணத்தை ரொக்கமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், ரொக்கப்பணத்தை எந்த வகையில் வழங்குவது குறித்து அரசு துறைகளிடையே ஆலோசனை நடந்து வருகிறது. பணத்தை வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் என நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது. மறுபுறம் பணத்தை நேரில் அளிப்பதே நல்லது என உணவுத்துறை தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிகிறது.