தமிழகத்தில் ஏரிகள் இரவு நேரங்களில் திறக்கப்பட மாட்டாது என்றும் பகல் நேரங்களில் மட்டுமே திறக்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். அதனால் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இருக்கலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அணைகள் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஏரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு நேரங்களில் திறக்கப்படாது என்றும் பகல் நேரங்களிலும் முன்னறிவிப்பின்றி ஏரிகள் திறக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கனமழை காரணமாக திருவாரூர்,மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று 3 பேர் உயிரிழந்ததாகவும் 950 வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறினார். மேலும் வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் அனைத்தும் கரை சேர்ந்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் 20 சென்டி மீட்டர் முதல் 30 சென்டிமீட்டர் அளவிற்கு மலை எதிர்பார்க்கப்படுவதால் ஆட்சியர்கள் முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது அமைச்சர் கூறியுள்ளார்.