Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. தாய்ப்பாலில் விஷம்…. இனி இத செய்யாதீங்க….. அமைச்சர் சொன்ன உவமை….!!!!

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென் மாநிலங்களுக்கான ஆய்வுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் சிவி மெய்யநாதன், தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் 174 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

எங்கேயாவது பிளாஸ்டிக் பார்த்தவுடனே நமக்கு கோபம் வர வேண்டும். தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களில் எது கலந்தாலும் அதனால் மாசு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிலம் மற்றும் கடல் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. அதனை தெரியாமல் உட்கொள்ளும் உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றன. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 59 இடங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்னும் இரண்டே வருடங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குப்பைகளையும் பிரித்தெடுக்கும் பணி முடிக்கப்படும். நீர்நிலைகளில் கழிவுகளை கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தைக் கலப்பது போன்றது. யாராவது இதனை செய்து வந்தால் அதனை நிறுத்திக் கொள்ளுங்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க கூடிய பணி மீண்டும் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மஞ்சள் பை வினியோகம் செய்யக்கூடிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |