ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.