Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட் அலர்ட் அலர்ட்…..!!!

தமிழகத்தில் வருகின்ற 14ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகின்ற 10 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரே சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து வருகின்ற 11ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனையடுத்து வருகின்ற 12ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வருகின்ற 13ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால் சென்னை பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • வருகின்ற 10ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை குமரி கடல் பகுதி, மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் இடையில் 65 கி.மீ. வேகத்தில் வீச கூடும்.
  • 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆந்திர கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையில் 65 கி.மீ. வேகத்திலும் வீச கூடும்.
  • வருகின்ற 10 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையில் 65 கி.மீ. வேகத்திலும் வீச கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |