Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 3 மாதங்களுக்கு கவனமா இருங்க…. சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மூன்று மாதங்கள் கவனம் தேவை என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதனை கட்டுப்படுத்த பல துறைகளுடன் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள்,திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகள் குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மக்கள் அனைவரும் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |