Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 3 மாதங்களுக்கு அலர்ட்டா இருங்க…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் 32,ஆயிரத்து 17 இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 5.01 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையானது குறைந்துள்ளது. 18 மாவட்டங்களில் மாநில சராசரி எண்ணிக்கை 1.1 என்ற விகிதத்தில் இருந்து குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 125 நாட்களாக டெங்கு காய்ச்சல் உள்ளது. குறிப்பாக அடுத்த 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காத வண்ணம் கண்காணிக்கவேண்டும்.

இதுவரை தமிழகத்தில் 375 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம்தோறும் தினமும் டெங்கு பாதிப்பை வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |