போலியாக வரும் குறுஞ்செய்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு சிலரின் மொபைல் போன் எங்களுக்கு கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்தாததால் இன்று இரவு முதல் மின்விநியோகம் துண்டிக்கப்படும், உடனே மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று போலியான தகவல் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்தி பலரும் ஏமாந்துள்ளனர்.
அதனால் போலியாக அனுப்பப்படும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாங்கள் மின்கட்டணம் செலுத்தாததால் மின்தடை செய்யப்படும் என்று தங்களின் வங்கி விவரம் கேட்டு ஏதாவது மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு செய்தி வந்தால் அதனை நம்ப வேண்டாம். மேலும் மின்னகம் மையத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.