தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி மட்டும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.