தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.அது மட்டுமல்லாமல் சத்தமா முப்பதாம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்களும் வாரம் தோறும் தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார சுகாதார நிலையங்கள் என 113 மருத்துவ மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.அதுமட்டுமல்லாமல் 14 முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.