தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்களர் பட்டியலில் திருத்தம்
செய்வதற்கான கடைசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. நவ.9 – டிச.8வரை அவகாசம் இருந்தாலும், வேலை நாட்களில் திருத்தம் செய்ய முடியாதவர்களுக்காக இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை முதல் டிச.8ம் தேதி வரை தாலுகா அலுவலகம், இணையதளம் மற்றும் செயலி மூலமாக வாக்களர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து கொள்ளலாம். 17 வயதுடைய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.