தமிழகம் முழுவதும் அரசினுடைய பல்வேறு திட்டங்களும் நியாயவிலைக் கடைகள் மூலமாக தான் மக்களை சென்றடைகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்டவையும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்படுவது உண்டு. இந்த வருடத்திற்கான பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வேஷ்டி சேலை உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த வருடம் வழங்கப்பட்ட வேஷ்டி சேலையில் இன்னும் மீதம் இருப்பதாகவும் அவை போக மீதம் உள்ள எண்ணிக்கையில் தான் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் எப்போதும் ஒரு கோடி 80 லட்சம் பயனர்களுக்கு வேஷ்டி சேலை அளிக்கும் விதமாக ஜூன் மாதமே உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு விடும். ஆனால் தற்போது தான் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதிலும் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையிலும் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது கடந்த ஆண்டின் இருப்பு வேஷ்டி சேலைகள் குறைந்த அளவில் இருக்க மட்டுமே வாய்ப்பு உள்ளது. மற்ற திட்டங்களைப் போல நாளடைவில் இந்த திட்டமும் ஒழிக்கப்பட்டுவிடும். இது குறித்து தமிழகம் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.