Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி ஆதார் இணைப்புக்கு தனி இணையதளம்…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை தற்போது இணைத்து வருகின்றது . அதன்படி மின்வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் கட்டண மையங்களிலும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

அதனுடன் பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது மட்டுமல்லாமல் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த  நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை மின்வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

Categories

Tech |