தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பிரித்து அனுப்பி, அதில் வேட்பாளர் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி இன்று ( பிப்.12 ) தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நோட்டா சின்னமும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது என்று தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.