Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. அடுத்த 3 வாரங்களுக்கு…. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை….!!!!

கொரோனா பரவலை தடுக்க அடுத்த மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை 21 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமான அளவில் குறையத் தொடங்கியுள்ளது.

வரக்கூடிய மூன்று வாரங்களில் மேலும் பரவல் வீதம்  மேலும் குறையும் என்பதால் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் கூறினார். அதே நேரத்தில் கேரள எல்லையோர பகுதிகள் மற்றும் கோவை,நீலகிரி மாவட்டங்களில் தொற்று இன்னும் குறையாததால் அந்தப் பகுதி மக்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டுமென அவர் கூறினார்.

Categories

Tech |