Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலட்சியமா இருக்காதீங்க…. அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய  ஒமிக்ரான்  வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவும் தற்போது சீரடைந்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருவதால் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கான்பூர் ஐஐடி மாணவர்கள் கொரோனா 4-வது அலை தமிழகத்தில் பரவும் என்று கூறியுள்ளனர். இதனால் எந்த தகவலையும் அலட்சியப்படுத்திவிட முடியாது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இறப்பு விகிதம் பூஜ்யம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |