தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தக்காளி விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தேவையின் அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மக்களுக்கு மலிவு விலையில் தக்காளி கிடைக்க அரசு கூட்டுறவு துறையின் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விலை 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.